டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் 
தற்போதைய செய்திகள்

பண உதவியைத் தாண்டி வேறென்ன உதவிகள் வேண்டும்.. உருக்கமாக டாடா குழுமத் தலைவர்!

லண்டனில் நிர்கதியாக நிற்கும் குழந்தைகளுக்கு பண உதவியைத் தாண்டி வேறென்ன உதவிகள் வேண்டுமென அறிந்து நிறைவேற்றுவோம்

DIN

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் தாய், தந்தையை இழந்து லண்டனில் நிர்கதியாக நிற்கும் குழந்தைகளுக்கு பண உதவியைத் தாண்டி வேறென்ன உதவிகள் வேண்டுமென அறிந்து நிறைவேற்றுவோம் என உருக்கமாக தெரிவித்துள்ள டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன், குழந்தைகளை காப்பதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை செய்யும் என கூறினார்.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத் அருகே விமானம் விபத்துக்குள்ளான பிறகு 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விமான விபத்துக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ள டாடா சன்ஸ் மற்றும் ஏர் இந்தியா தலைவர் என். சந்திரசேகரன், இந்த விபத்து டாடா நடத்தும் விமான நிறுவனத்தில் நடந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன். விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலையும் முழு ஆதரவையும் உறுதியளித்தவர், இதயத்தை நொறுக்கும் விஷயம் இது. விமான விபத்தில் இழப்பை சந்தித்தவர்களுக்கு ஆறுதல் கூற எனக்கு வார்த்தைகள் இல்லை, ஆறுதல் சொல்வது மிகவும் கடினமான ஒன்று. நாம் என்ன சொன்னாலும் அவர்களின் இழப்பை ஈடு செய்ய முடியாது. அவர்களின் தூக்கத்தில் நானும் பங்கேற்கிறேன். இப்போதும் எதிர்காலத்திலும் அவர்களுக்கு ஆதரவளிப்பதும் மட்டுமே நாம் செய்ய முடியும்.

குடும்பங்களை இழந்தவர்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் துணை நிற்பேன். அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும், எந்த வகையில் வேண்டுமானலும் உதவி செய்வேன்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி

உயிரிழந்த மனைவியின் அஸ்தியை கரைக்க லண்டனில் இருந்து இந்தியா வந்து, விமான விபத்தில் தந்தையையும் இழந்து லண்டனில்

நிர்கதியாக நிற்கும் 4, 8 வயது குழந்தைகளுக்கு பண உதவியைத் தாண்டி வேறென்ன உதவிகள் வேண்டுமென அறிந்து நிறைவேற்றுவோம் என

உருக்கமாக தெரிவித்த சந்திரசேகரன், குழந்தைகளை காப்பதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை செய்யும் என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா வழங்கக் கோரி மனு

மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்து வந்த பெற்றோரை எச்சரித்த ஆட்சியா்

காரீப் பருவத்தில் பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

இந்தியன் வங்கி சாா்பில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

SCROLL FOR NEXT