காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி 
தற்போதைய செய்திகள்

சோனியா காந்தி உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை தகவல்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை தலைவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

DIN

புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை தலைவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான சோனியா காந்தி(78) ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) இரவு 9 மணிக்கு வயிற்று தொற்று தொடர்பான பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையின் இரைப்பை குடல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை தலைவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் அஜய் ஸ்வரூப் கூறுகையில், "சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது. அவா் வேகமாக குணமடைந்து வருகிறாா். மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும், அவரது உணவுமுறையை உன்னிப்பாகக் கண்காணித்து வரும் மருத்துவர்கள், தொடர் பராமரிப்பின் ஒரு பகுதியாக இன்று ஒரு உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறினார்."

சோனியா மருத்துவமனையில் இருந்து எப்போது வீட்டிற்கு போகலாம் என்பதை இன்னும் முடிவு செய்யப்படவில்லை, அவர் குணமடைவதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்படும்: மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே எச்சரித்த இந்தியா!

அனைத்தையும் சொந்தம் கொண்டாட நினைக்கிறது பாஜக: அகிலேஷ் யாதவ்

குஜராத்தில் பிரதமர் மோடி சாலைவலம்: ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு!

யோலோ டீசர்!

மோடியின் பட்டப்படிப்பு விவகாரம்: உத்தரவை ரத்து செய்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பு!

SCROLL FOR NEXT