படம் | ஹாக்கி இந்தியா பதிவு
தற்போதைய செய்திகள்

ஹாக்கி: பெல்ஜியத்திடம் வீழ்ந்தது இந்தியா!

இந்திய மகளிர் அணிக்கு 5-ஆவது தோல்வி!

DIN

ஆண்ட்வெர்ப்[பெல்ஜியம்] : ஐரோப்பாவில் நடைபெற்றுவரும் ஹாக்கி புரோ லீக் தொடரில் பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 1 - 5 என்ற புள்ளிக்கணக்கில் இன்று (ஜூன் 21) தோல்வி அடைந்தது.

இந்திய அணியில் தீபிகா ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் தீபிகாவின் ஒரு கோலால் இந்தியா 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

எனினும், இரண்டாம் பாதியில், பெல்ஜியம் கடுமையாகப் போராடி இந்திய அணியை திணறடித்தது. 37’, 41’, 54’, 55’, 58’ என அடுத்தடுத்து பெல்ஜியம் கோல் மழை பொழியவே இந்திய வீராங்கனைகள் அவற்றைத் தடுக்க திணறினர். இறுதியில் 1 - 5 என்ற கணக்கில் தோல்வியடைந்தது இந்தியா.

தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சலீமா, நாளை நடைபெறும் ஆட்டத்தில் தவறுகளை திருத்திக்கொண்டு ஒரு அணியாகப் போராடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

SCROLL FOR NEXT