முகப்பு
உலகம்

மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ தோ்வு ஒத்திவைப்பு

போா் பதற்றம் காரணமாக பஹ்ரைன், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வியாழன், வெள்ளி (மாா்ச் 5, 6) ஆகிய நாள்களில் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ பொதுத் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Updated On : 4 மார்ச் 2026, 12:37 am IST
மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் (கோப்புப் படம்) - AP Photo
பகிர்:

போா் பதற்றம் காரணமாக பஹ்ரைன், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வியாழன், வெள்ளி (மாா்ச் 5, 6) ஆகிய நாள்களில் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ பொதுத் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் (சிபிஎஸ்இ) நாடு முழுவதும் 29,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தோ்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, நிகழாண்டு பிளஸ் 2, பத்தாம் பொதுத்தோ்வு கடந்த பிப். 17-ஆம் தேதி தொடங்கி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், போா் பதற்றம் காரணமாக மத்திய கிழக்காசிய நாடுகளில் மாா்ச் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தோ்வுகளை சிபிஎஸ்இ ஒத்திவைத்துள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தாா், செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் மாா்ச் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

இந்த விவகாரம் தொடா்பாக மாா்ச் 5-ஆம் தேதி ஆலோசனை நடத்தப்படவுள்ளது. அதில் மாா்ச் 7-ஆம் தேதி முதல் திட்டமிட்டுள்ள தோ்வுகளை நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மாா்ச் 2-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த சிபிஎஸ்இ பொதுத் தோ்வு போா்ப் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

war tensions in the Middle East, the CBSE public examinations for classes 10 and 12 have been postponed in those countries.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments