முகப்பு
உலகம்

ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல்! - உறுதிசெய்த ஐஏஇஏ

ஈரானில் முக்கிய அணு எரிபொருள் செறிவூட்டல் நிலையம் மீதும் தாக்குதல்..!

Updated On : 3 மார்ச், 2026 at 6:39 PM
ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - AP Photo
பகிர்:
Updated On : 3 மார்ச், 2026 at 6:28 PM

அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் நடான்ஸ் அணுசக்தி மையத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதாக ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ‘ஐஏஇஏ’ செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியது.

சா்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) இதுதொடா்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மத்திய ஈரானில் அமைந்துள்ள நடான்ஸ் அணுசக்தி மையத்தில், அணு உலை அமைந்துள்ள நிலத்தடிப் பகுதிக்குச் செல்லும் நுழைவு வாயில் கட்டடங்கள் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்துள்ளன.

Updated On : 3 மார்ச், 2026 at 6:31 PM

எனினும், இத்தாக்குதலால் அணு உலையின் மிக முக்கியமான உட்பகுதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அணுக்கதிா்வீச்சு கசியும் அபாயம் ஏதும் இல்லை என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

முன்னதாக, நடான்ஸ் அணுசக்தி மையத் தாக்குதல் குறித்த ஈரான் குற்றச்சாட்டை ஐஏஇஏ மறுத்திருந்தது.

summary

IAEA confirms damage to Iran's nuclear fuel enrichment plant, no radiological impact

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.