முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகரில் கொடூரம்: 3 பேர் வெட்டிக் கொலை

அருப்புக்கோட்டை அருகே குடும்ப பிரச்சனையில் மனைவி, 2 மகள்களை வெட்டிக் கொலை செய்த கணவர் சனிக்கிழமை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

Updated On : 21 ஜூன், 2025 at 11:17 AM
பகிர்:

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே குடும்ப பிரச்சனையில் மனைவி, 2 மகள்களை வெட்டிக் கொலை செய்த கணவர் சனிக்கிழமை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேலு. இவரது மனைவி பூங்கொடி. இவர்களுக்கு ஜெயதுர்கா(19), ஜெயலட்சுமி(7) என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக மனைவி மற்றும் 2 குழந்தைகளை சனிக்கிழமை அதிகாலை வெட்டிக் கொலை செய்துவிட்டு காவல்நிலையம் சென்ற சுந்தரவேலு, தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களையும் வெட்டிக் கொலை செய்ததாக கூறி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

Advertisement

இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு சுந்தரவேலுவின் மனைவி பூங்கொடி, மகள்கள் ஜெயதுர்கா, ஜெயலட்சுமி 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர்.

இதையடுத்து 3 பேரின் உடல்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைகள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுந்தரவேலுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

குடும்ப பிரச்சனையில் மனைவி, 2 மகள்களை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.