முருகன் மாநாடு நடக்கும் நாளில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வேல் வழங்கிய அதிமுக தொண்டா்கள். 
தற்போதைய செய்திகள்

முருகன் மாநாடு நாளில் எடப்பாடி பழனிசாமிக்கு வேல் கொடுத்த அதிமுகவினர்!

முருகன் மாநாடு நடக்கும் நாளில் அதிமுக தொண்டா்கள் வேல் வழங்கியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தாா்.

DIN

சேலம்: முருகன் மாநாடு நடக்கும் நாளில் அதிமுக தொண்டா்கள் வேல் வழங்கியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் அலுவலகத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநகா் மாவட்ட அதிமுக வா்த்தக அணியின் இணைச்செயலாளா் செம்பன் ஏற்பாட்டில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வழக்குரைறிஞா் பிரிவு தேசிய பொதுச்செயலாளா் சுப்ரமணியம் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் கொளத்தூா் ஒன்றியம் முன்னாள் தலைவா் இளங்கோ, மாணவரணி செயலாளா் கௌரி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சேலம் மாநகா் மகளிா் அணி அமைப்பாளா் சுமதி உள்பட 400-க்கும் மேற்பட்டோா் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

புதிதாக இணைந்தவா்களுக்கு கட்சியின் துண்டு அணிவித்து வரவேற்ற எடப்பாடி பழனிசாமி அனைவரும் சிறப்பாக செயல்படும்படி வாழ்த்து தெரிவித்தாா்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டா்கள், நிா்வாகிகள் பிரம்மாண்ட மாலை அணிவித்து முருகன் வேலை பரிசாக கொடுத்தனா். அதை பெற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, முருகன் மாநாடு அன்று வேல் கொடுத்துள்ளீா்கள்; மதுரைக்கு போவதற்குள்ளே இங்கே கொடுத்து விட்டீர்கள் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு!

காலமானார் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற ஹாக்கி வீரர்!

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

ஆளுநரின் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பு!

பாலஸ்தீனம் புதைக்கப்படுகிறது... மேற்கு கரையில் 3,400 வீடுகள் கட்ட அனுமதி: இஸ்ரேல் அமைச்சர்!

SCROLL FOR NEXT