தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தற்போதைய செய்திகள்

கல்வி மூலம் சாதித்த திருநங்கை: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற திருநங்கை முனைவர் ஜென்சி உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்

DIN

ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற திருநங்கை முனைவர் ஜென்சி உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை லயோலை கல்லூரி ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை முன்னைவர் என்.ஜென்சி, அந்த கல்லூரியின் ஆங்கில உதவி பேராசிரியராக நியனம் செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் வாழ்த்து

இந்நிலையில், ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற திருநங்கை முனைவர் ஜென்சி உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

வாழ்த்துகள் முனைவர் ஜென்சி!

உங்களது உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக்கரை சேரட்டும்!

தடைகளையும் புறக்கணிப்புகளையும் கல்வி எனும் பேராற்றலால் வெல்லட்டும்!

முதல்வர் வாழ்த்து மகிழ்ச்சி அளிக்கிறது

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தைத் தொடர்ந்து முனைவர் ஜென்சி கூறியதாவது:

டாக்டர் ஜென்சி என என்னை குறிப்பிட்டு முதல்வர் வாழ்த்து தெரிவித்திருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

மூன்றாம் பாலினத்தவரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு திராவிட மாடல் அரசு பல நலத்திடங்களை செய்து வரும் நிலையில், அதற்கு வலுசேர்க்கும் விதமாக இது அமைந்துள்ளது.

திருநங்கை என்றாலே ஒரு விதமான பிற்போக்கு சிந்தனை நிலவும் இந்த சமூகத்தில் படிப்பிற்கு எந்த பாலினமும் தடையில்லை என்ற நம்பிக்கை இதன் மூலம் அனைவரிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது என நெகிழ்ச்சியோடு கூறிய முனைவர் ஜென்சி, தமிழகத்தில் உள்ள ஏதாவதொரு அரசு கல்லூரியில் எனக்கு பணி நிரந்தரம் செய்து வேலை வழங்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆர்வலர் சாலுமரதா திம்மக்கா 114 வயதில் காலமானார்! தலைவர்கள், முன்னாள் பிரதமர் இரங்கல்!

Dulquer Salmaan-ன் Kaantha படம் எப்படி இருக்கு? | Public Review | Dinamani Talkies

பிகாரின் ஒரே முதல்வர் - ஆளுங்கட்சியின் எக்ஸ் பதிவு உடனடி நீக்கம்!

உங்களை நினைக்கிறேன்... சுனந்தா சர்மா!

ஹேய் குட்பை நண்பா... காயத்ரி சண்!

SCROLL FOR NEXT