திருப்பூரில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் பாலமுருகன். 
தற்போதைய செய்திகள்

இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக் கொலை: 3 பேர் கும்பல் வெறிச்செயல்!

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகரான பாலமுருகன்(30) மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகரான பாலமுருகன்(30) மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் குமாரானந்தபுரம் காமராஜர் வீதில் வசித்து வருபவர் பாலமுருகன் (30). இவர் இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு வழக்குரைஞர் பிரிவு ஒன்றிய தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும் அவர் அதே பகுதியில் பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 12 மணிக்கு வீட்டி விட்டு சென்ற பாலமுருகன் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை பாலமுருகன் வசித்து வரும் காமராஜர் வீதியில் மர்ம நபர்களால் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலை அடுத்து சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்த திருப்பூர் வடக்கு காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றிய விசாரணை மேற்கொண்டதில் நள்ளிரவு சுமார் 4 மணிக்கு மூன்று பேர் கொண்ட கும்பல் பாலமுருகனை அவர் வசிக்கும் அதே வீதியில் சரமாரியாக வெட்டியது. வெட்டு காயங்களுடன் ஒடியவரை தூரத்திச் சென்று அவரது தலை பகுதியில் கொடூரமாக வெட்டி கொலைசெய்து விட்டு அங்கிருந்து சென்றது தெரியவந்தது.

அங்குள்ள சிசிடிவி கேமாராவில் பதிவான அடிப்படையில் போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்தில் திருப்பூர் மாநகர் காவல் வடக்கு துணை ஆணையர் பிரவின் கௌதம், வடக்கு காவல் உதவி ஆணையர் வசந்த் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன்

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

எந்த நடிகர் மாநாடு நடத்தினாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை: செல்லூர் ராஜு

கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிகர கடன் 42 சதவிகிதம் உயர்வு!

ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா்: ஜி.கே வாசன்

SCROLL FOR NEXT