முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து புதன்கிழமை காலை (ஜூன் 25) வினாடிக்கு 7,815 கன அடியாக சரிந்துள்ளது.

Updated On : 25 ஜூன், 2025 at 9:18 AM
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 7,815 கன அடியாக சரிந்துள்ளது.
பகிர்:

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து புதன்கிழமை காலை (ஜூன் 25) வினாடிக்கு 7,815 கன அடியாக சரிந்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது மழை தணிந்ததால் புதன்கிழமை காலை (ஜூன் 25) நீர்வரத்து வினாடிக்கு 10,109 கன அடியிலிருந்து 7,815 கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 112.85 அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 18,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 82.52 டிஎம்சியாக உள்ளது.

Advertisement

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.