கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

மெக்சிகோ: துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி

மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் நடைபெற்ற கிறிஸ்துவ மத நிகழ்ச்சியின் போது கூட்டத்தினர் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகினர்.

DIN

மெக்சிகோ: மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் நடைபெற்ற கிறிஸ்துவ மத நிகழ்ச்சியின் போது கூட்டத்தினர் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகினர்.

மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணம் இரபுவாடோ நகரில் கிறிஸ்தவ மத நிகழ்ச்சியில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் புனித யோவான் பாப்டிஸ்டைக் கொண்டாடும் விதமாக மது அருந்திக் கொண்டு தெருவில் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, துப்பாக்கிகளுடன் கூட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், 12 பேர் பலியானர், 20 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க கூட்டத்தினர் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் தப்பியோடினர். இதுகுறித்த சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் விடியோக்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்திற்கு வருத்தம், கண்டனம் தெரிவித்துள்ள மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறியுள்ளார்.

கடந்த மாதம், குவானாஜுவாடோவின் சான் பார்தோலோ டி பெர்ரியாஸ் நகரில் கத்தோலிக்க திருச்சபை ஏற்பாடு செய்திருந்து விருந்து நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் பலியாகினர்.

மெக்சிகோ நகரத்தின் வடமேற்கே அமைந்துள்ள குவான்ஜுவாடோ, நாட்டின் மிகவும் வன்முறை நிறைந்த மாகாணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மெக்சிகோ மாகாணத்தில் மட்டும் 1,435 கொலைகள் நடந்துள்ளன, இது பிற மாகாணங்களில் நடந்துள்ள கொலைகளை விட இரண்டு மடங்கு அதிகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT