கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

கனமழை: வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக வால்பாறையில் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு வியாழக்கிழமை(ஜூன் 26) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

DIN

வால்பாறை: கனமழை காரணமாக வால்பாறையில் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு வியாழக்கிழமை(ஜூன் 26) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் வியாழக்கிழமை (ஜூன் 26) முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஜூன் 26) ஓரிரு இடங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கோவை மாவட்டம், வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை (ஜூன் 26) விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கு வருவதில் கௌரவம்: மெஸ்ஸி

குஜராத் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்பு அதிகரிப்பு! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

வாட்ஸ்ஆப் vs அரட்டை! அதீத வரவேற்பைப் பெறுகிறது! முதலிடம்!!

துப்பாக்கிகள் வைத்து ஆயுத, சரஸ்வதி பூஜை கொண்டாடிய புதுச்சேரி போலீசார்

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிடும் அவல நிலை! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT