மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,332 கனஅடியாக அதிகரித்துள்ளது. 
தற்போதைய செய்திகள்

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வியாழக்கிழமை காலை (ஜூன் 26) வினாடிக்கு 13,332 கன அடியாக அதிகரித்துள்ளது.

DIN

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வியாழக்கிழமை காலை(ஜூன் 26) வினாடிக்கு 13,332 கன அடியாக அதிகரித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழையானது கர்நாடக மாநிலத்தில் காவிரியில் நீர் பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் தொடர்ந்து பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி அவ்விரு அணைகளிலிருந்து வியாழக்கிழமை காவிரியில் வினாடிக்கு 63,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ஒகேனக்கல்லுக்கு வியாழக்கிழமை காலை 32,000 கனஅடியாக அதிகரித்து தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது, வியாழக்கிழமை (ஜூன் 26) நீர்வரத்து வினாடிக்கு 13,332 கன அடியிலிருந்து 18,920 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 112.73 அடியாக உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 20,000 கன அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 82.348 டிஎம்சியாக உள்ளது.

இதனால் காவிரி டெல்டா பாசனத்திற்து தடையின்றி தண்ணீர் கிடைக்கும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய அறிவிப்புகள்: தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் முதல்வருக்கு நன்றி

பிரசித்திபெற்ற ஸ்ரீ செங்கழுநீரம்மன் ஆலய தேர்த் திருவிழா: தேரை வடம்பிடித்து இழுத்த ஆளுநர், முதல்வர்

2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர் மோடி

விஜய்யை முந்தினாரா ரஜினி? விமர்சனங்களால் தடுமாறும் கூலி!

இருசக்கர வாகனப் பேரணியை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்!

SCROLL FOR NEXT