கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு!

ஹரியாணாவில் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைப் பற்றி...

DIN

ஹரியாணா மாநிலம் அம்பலா மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தின் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அம்பலா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (மார்ச்.1) வழக்கு விசாரணைக்காக ஒரு நபர் ஆஜராகியுள்ளார். அப்போது, அங்கு காரில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதையும் படிக்க: யூனியன் தலைவர் பதவிக்கு ரூ. 30 லட்சம்! ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வால் ஒருவர் தற்கொலை முயற்சி?

இந்த தாக்குதலில் அங்கிருந்தவர்கள் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ள நிலையில், முன்பகையினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து, அம்பலா காவல் துறையினர் விசாரணை துவங்கியுள்ள நிலையில் தாக்குதல் நடத்தி தப்பி சென்ற குற்றவாளிகளைப் பிடிக்க அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து வருகின்றனர். மேலும், சம்பவயிடத்தில் காலியான மூன்று தோட்டா குப்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டுறவு உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு: 465 போ் பங்கேற்பு

கோழிக்கறி சாப்பிட்டவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வியாபாரியிடம் வழிப்பறி

இளைஞா் மா்ம மரணம்

மேல் எடையாளம் - ராஜாம்புலியூா் இடையே புதிய மேம்பாலம்: கிராம சபைக் கூட்டத்தில் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு

SCROLL FOR NEXT