மதுரையில் உதவியாளர் உதவியுடன் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதிவரும் மாணவன் தினேஷ். 
தற்போதைய செய்திகள்

விபத்தில் படுகாயம்: உதவியாளர் உதவியுடன் தேர்வு எழுதிய பிளஸ் 1 மாணவன்!

மதுரையில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் காலில் காயம் ஏற்பட்ட மாணவன் உதவியாளர் உதவியுடன் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதிவருவது ஆசிரியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

மதுரை: மதுரையில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் காலில் காயம் ஏற்பட்ட மாணவன் உதவியாளர் உதவியுடன் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதி வருவது ஆசிரியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்ற மாணவன் மதுரா கல்லூரி பள்ளியில் பிளஸ் 1 படித்துவரும் நிலையில், சில மாதங்களுக்கு முன்பு விராதனூர் அருகே பேருந்திற்காக காத்திருந்தபோது அரசுப் பேருந்து மோதி கால் மற்றும் இடுப்பில் கடுமையான காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தோ்வு புதன்கிழமை (மாா்ச் 5) முதல் மாா்ச் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், முதல் நாள் நடைபெறும் தமிழ் மொழித் தேர்வை கடுமையான காயங்களுடன் தேர்வுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவாறே படித்த மாணவன் தினேஷ் காலில் காயத்தோடு உதவியாளர் உதவியுடன் பிளஸ் 1 பொதுத் தோ்வை எழுதி வருகிறார்.

சிறு வயதிலயே தந்தையை இழந்த தினேஷ், நன்கு படிக்கும் என்ற கூலித்தொழிலாளியான தனது தாயாரின் ஆசை நிறைவேற்றுவதற்காக வேதனையையும் பொருட்படுத்தாமல் பொதுத்தேர்வு எழுதி வருவது ஆசிரியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் விரிசல்: மக்கள் அச்சம்!

விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு: ஹிந்து அமைப்புகள் போராட்டம்! கர்நாடகத்தில் 144 தடை!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்காக தில்லி புறப்பட்ட ஒடிசா முதல்வர்!

மும்பையில் 23 மாடி கட்டடத்தில் பயங்கர தீவிபத்து: பெண் பலி

“ஜெர்மனி முதலீட்டாளர்கள் என்ன சொன்னாங்க தெரியுமா..?”: முதல்வர் MK Stalin பேட்டி

SCROLL FOR NEXT