முகப்பு
தமிழ்நாடு

மதுரையில் பிளஸ் 2 தேர்வு எழுத சென்ற மாணவி சாலை விபத்தில் பலி

மதுரையில் பிளஸ் 2 தேர்வு எழுத சென்ற மாணவி விபத்தில் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 2 மார்ச், 2026 at 2:00 PM
விபத்தில் பலியான மாணவி துர்கா தேவி.
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 1:53 PM

மதுரையில் பிளஸ் 2 தேர்வு எழுத சென்ற மாணவி விபத்தில் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 3000 -க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதப்பட்டு வருகிறது.

Updated On : 2 மார்ச், 2026 at 1:53 PM

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஆவியூரைச் சேர்ந்த கண்ணன் மகள் துர்கா தேவி(17). இவர் மதுரை தெப்பகுளம் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார் .

Advertisement

இந்நிலையில் ஆவியூரில் இருந்து மதுரை காமராஜர் சாலையில் உள்ள நிர்மலா மேல்நிலைப் பள்ளிக்கு தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அல்லிக்குளம் பகுதியில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கரத்தில் விழுந்த மாணவி சம்பவ இடத்திலேயே பலியானார்.

Updated On : 2 மார்ச், 2026 at 1:53 PM

பெருங்குடி போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கொண்டு சென்றனர். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிளஸ் 2 தேர்வு எழுத சென்ற மாணவி துர்கா தேவி அரசுப் பேருந்து மோதி பலியான சம்பவம் வலையங்குளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

summary

The tragic incident in Madurai where a student died in an accident while writing her Plus 2 exam has caused a stir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.