அமைச்சர் ரகுபதி கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

கள்ளக்கூட்டணியை காப்பாற்ற இரட்டை வேடம் போடும் அதிமுக: அமைச்சர் ரகுபதி பதிலடி

தனது கள்ளக்கூட்டணியை காப்பாற்றுவதற்காக அதிமுக இரட்டை வேடம் போடுகிறது எனவும் உங்களைப் போன்ற அடிமைகளை மக்கள் நம்ப போவதுமில்லை

DIN

சென்னை: தனது கள்ளக்கூட்டணியை காப்பாற்றுவதற்காக அதிமுக இரட்டை வேடம் போடுகிறது எனவும் உங்களைப் போன்ற அடிமைகளை மக்கள் நம்ப போவதுமில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

தொகுதி மறுசீரமைப்பின் பெயரால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேராபத்தை உணர்ந்து முதல்வர் நடத்திய அனைத்துக் கட்சிகூட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

கட்சி வேறுபாடுகளைத் தாண்டி தமிழ்நாட்டின் ஒற்றுமைக்குரலை வெளிப்படுத்த வேண்டும் எனும் முனைப்போடு முதல்வர் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

தமிழர்களுக்கு எதிரியான பாஜகவும் அதன் எடுபிடிகள் சிலரையும் தவிர அனைவரும் பங்கெடுத்து முதல்வரின் முன்னெடுப்பிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

அதிமுகவும் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு கொடுத்தது, ஆனால் செய்தியாளர்களை சந்தித்த ஜெயகுமார் திமுக நாடகம் நடத்துகிறது என மாற்றிப் பேசுகிறார்.

தனது கள்ளக்கூட்டாளி பாஜகவுடன் இணைந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகுவைத்து அடிமை ஆட்சி நடத்திய அதிமுக இதனை சொல்வதற்கு எதாவது தகுதியிருக்கிறதா?

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கெடுக்காமல் போனால் தமிழ்நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு விடுவோமோ எனும் அச்சத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக நாடகம் நடத்தியிருக்கின்றது, என்பதையே ஜெயகுமாரின் பேச்சு காட்டுகிறது.

பாஜகவுடன் இணைந்து நீங்கள் நடத்தும் கபட நாடகம் என்றைக்கும் வெற்றி பெற போவதில்லை, உங்களைப் போன்ற அடிமைகளை மக்கள் நம்ப போவதுமில்லை.

முதல்வரின் தலைமையில் தமிழ்நாடு போராடும், தனது உரிமையை வெல்லும்! என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீதிக் கதைகள்! நீங்கள் கேட்ட நரகம்!

கரும்பு ஆலையில் பராமரிப்புப் பணியின் போது விபத்து: 2 பேர் பலி

ஆப்கானிஸ்தான் டி20 தொடர்: மேற்கிந்தியத் தீவுகள் அறிவிப்பு!

இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் குவியும் பக்தர்கள்!

தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது விழுந்த கிரேன்! 22 பேர் பலி

SCROLL FOR NEXT