உலக மகளிர் நாளையொட்டி மகளிர் நலனுக்காக ஆட்சி மாற்றம் வேண்டும் என அதிமுக கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
இன்று(மார்ச் 8) உலகம் முழுவதும் மகளிர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது.
இதையும் படிக்க | மகளிர் தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி இந்த விழாவில் கலந்துகொண்டு கேக் வெட்டி, பெண் நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார். மேலும் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
தொடர்ந்து திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, 'மகளிர் நலன் காக்க மாற்றம் வேண்டும்' என கையெழுத்து இயக்கத்தைத் தொடக்கிவைத்து தானும் கையெழுத்திட்டார். அதிமுக நிர்வாகிகள் பலரும் கையெழுத்திட்டனர்.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மக்களிடம் அதிமுகவினர் கையெழுத்து பெற இருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.