கோவை விமான நிலைய வளாகத்தில் பயணிகள் ஏற்றிச் செல்லும் இடத்தில் வாகனம் நிறுத்துவதில் விமான நிலைய ஒப்பந்த ஊழியருக்கும் - டாக்ஸி ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
கோவை விமான நிலையத்தில் டாக்ஸிகளை அதிக நேரம் நிறுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் இருந்து வருகிறது. இந்த நிலையில், டாக்ஸி ஓட்டுநரிடம் ஒப்பந்த பணியாளர் டாக்ஸியை நீண்ட நேரம் நிறுத்தக் கூடாது என கூறியுள்ளார். இதனால் விமான நிலைய ஒப்பந்த ஊழியருக்கும் - டாக்ஸி ஓட்டுநருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இதையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படையினர், டாக்ஸி ஓட்நர்கள் உடனடியாக தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்தனர்.
சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே இந்த மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.