முதல்வா் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினா்களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.9) நடைபெற உள்ளது.
தற்போதைய செய்திகள்முதல்வா் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினா்களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.9) நடைபெற உள்ளது.
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினா்களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.9) நடைபெற உள்ளது.
இது தொடா்பாக திமுக பொதுச் செயலா் துரைமுருகன் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநிலங்களவை, மக்களவை திமுக உறுப்பினா்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில், எம்.பி.க்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடா் குறித்து இந்தக் கூட்டத்தில் திமுகவின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடா்பாக எம்.பி.க்களுக்கு முதல்வா் ஆலோசனை வழங்க உள்ளாா்.