முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தற்போதைய செய்திகள்

மத்திய அரசைக் கண்டித்து மார்ச் 12-ம் தேதி திமுக கண்டனப் பொதுக்கூட்டம்!

திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்.

DIN

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12 ஆம் தேதி கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

திருவள்ளூரில் நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.

திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பைக் கண்டித்து மத்திய அரசின் செயல்களை மக்களிடம் எடுத்து கூறும் விதமாக "தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்" என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் மார்ச் 12 ஆம் தேதி மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்.

அதேபோல், குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார்.

திருச்சி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மேலும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளவர்களின் பட்டியலை திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT