கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

பிச்சைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற நபர் கைது!

மகாராஷ்டிரத்தில் பிச்சைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதைப் பற்றி...

DIN

மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில் பிச்சைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச்.4 அன்று நள்ளிரவு லாத்தூரின் அவுஸா நகரத்திலுள்ள ஒரு கடையின் வாசலில் பிச்சைக்காரர் ஒருவர் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த யோகேஷ் சித்ராம் புட்டே என்பவர் அந்த பிச்சைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதையும் படிக்க: மகளிர் நாள்: பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தைக் கையாளும் 6 பெண்கள் யார்?

இதனால், படுகாயமடைந்த அந்த பிச்சைக்காரர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக லாத்தூர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட யோகேஷ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், அந்த நபர் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதினால் இவ்வாறு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா? பிரதீப் ரங்கநாதன் பதில்!

விழாக் காலம்... பிரணிதா!

சிரிக்கும் செவ்வானம்... ஐரா தயானந்த்!

நட்சத்திரங்களுக்குக் கீழே கருஞ்சிவப்பில்... ஆர்த்தி!

கார் மோதியதற்கு ஆதாரம் இருந்தால் காட்டுங்கள், மன்னிப்புக் கேட்கிறேன்! - திருமா

SCROLL FOR NEXT