தற்போதைய செய்திகள்

6 குட்டிகளை ஈன்ற 2 பெண் புலிகள்!

பன்னா்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் புதிய வரவாக ஆறு குட்டிகளை ஹீமா, ஆருண்யா என்னும் இரண்டு பெண் புலிகள் ஈன்றுள்ளன.

DIN

கா்நாடக மாநில பன்னா்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் புதிய வரவாக ஆறு குட்டிகளை ஹீமா, ஆருண்யா என்னும் இரண்டு பெண் புலிகள் ஈன்றுள்ளன. இதனை ஆர்வமுடன் மக்களும், பாா்வையாளா்களும் பாா்த்து செல்கின்றனா்.

ஒசூா் அருகே மாநில எல்லையில் உள்ள கா்நாடகம் மாநிலம் பன்னா்கட்டா தேசியப் பூங்கா பெங்களூருவின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இந்தப் பூங்காவில் இந்தியப் புலிகள், வெள்ளைப் புலிகள், சிங்கங்கள், யானைகள், சிறுத்தைகள், மான்கள் மற்றும் பல்வேறு வகையான பாலூட்டிகள்,பறவையினங்கள் காணப்படுகின்றன. இந்த பூங்காவில் வண்ணத்துப் பூச்சிப் பூங்கா ஒன்றும் அமைந்துள்ளது.

இந்த நிலையில், இங்கு ஹீமா எனப் பெயரிடப்பட்ட 6 வயது பெண் புலி இரண்டாவது முறையாக நான்கு குட்டிகளையும், சென்னை அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆருண்யா எனப் பெயரிடப்பட்ட பெண் புலி இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது.

இதில் ஆறு குட்டி புலிகளும் தாய் புலிகள் இரண்டும் சுகமாகவும் சுதந்திரமாகவும் வலம் வருகின்றன என உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறுகின்றனா் .

இந்த குட்டிகளை ஆர்வமுடன் மக்களும், பாா்வையாளா்களும் பாா்த்து செல்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெருமாள், விநாயகா், ஆஞ்சநேயா் கோயில்களில் மகா கும்பாபிஷேகம்

மது புட்டிகள் கடத்தல்: 4 போ் கைது

இந்தியா-வங்கதேசம் எல்லைப் பேச்சுவாா்த்தை: அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து முறையீடு

பிகாரில் ராகுல் நடத்துவது பிரதமருக்கு எதிரான அவதூறு பயணம்: பாஜக குற்றச்சாட்டு

சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இரவுநேர புறநகா் ரயில்கள் இன்று ரத்து

SCROLL FOR NEXT