கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ 
தற்போதைய செய்திகள்

அதிபரின் நன்கொடையால் வெடித்த மோதல்!

கென்யா அதிபர் அளித்த நன்கொடையால் மோதல் வெடித்துள்ளதைப் பற்றி...

DIN

கென்யா நாட்டு அதிபர் தேவாலயத்திற்கு அளித்த நிதியுதவியினால் அந்நாட்டில் மோதல் வெடித்துள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் அதிபர் வில்லியம் ரூட்டோ அந்நாட்டின் தலைநகர் நைரோபியிலுள்ள ஜீசஸ் வின்னர் மினிஸ்ட்ரிக்கு சொந்தமான தேவாலயத்திற்கு 20மில்லியன் சில்லிங் அளவிலான பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதன் மதிப்பானது இந்திய ரூ.1.35 கோடி எனக் கணக்கிடப்படுகிறது.

இந்த செயலானது அந்நாட்டின் விலைவாசி உயர்வினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பை பெற்றது.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் அந்த தேவாலயத்தை கைப்பற்ற முயன்றனர். இதனால், அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

அப்போது, போராட்டக்காரர்கள் அங்குள்ள பொருள்களை தீயிட்டு கொளுத்தியும் பாறைகள் குவித்தும் அப்பகுதி சாலைகளை முடக்கினர். இருப்பினும், போலீஸாரின் பாதுகாப்புடன் தேவாலயத்தில் பக்தர்கள் பிராத்தனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.

இதையும் படிக்க: தெற்கு சூடானில் படைகளை இறக்கிய உகாண்டா!

இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விரட்டியதுடன், மோதலில் ஈடுபட்டதாக 38 பேரை கைது செய்துள்ளனர்.

முன்னதாக, கடந்த 2022 ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராக ரூட்டோ பதவியேற்றது முதல் தொடர்ந்து அவர் விதித்து வரும் வரிகளால் அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் கொண்டு வந்த நிதிநிலை அறிக்கையில் விதிக்கப்பட்டிருந்த வரி உயர்வைத் தொடர்ந்து நாடுத்தழுவிய மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால், அந்த வரிகள் விலக்கப்பட்டது.

மேலும், கடந்தாண்டு (2024) தேவாலயங்களை அரசியலுக்கு பயன்படுத்துவதை நிறுத்தி கொள்ளவேண்டும் எனக் கூறி கென்யா நாட்டின் கத்தோலிக்க மற்றும் ஏஞ்சலிக்க தலைவர்கள் நன்கொடைகள் பெறுவதற்கு மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குரிமையை இழக்கும் நிலை ஏற்படலாம்; வாக்குத் திருட்டைத் தடுக்க வேண்டும்! - முதல்வர் பேச்சு

பென் ஸ்டோக்ஸை கிண்டல் செய்யும் ஆஸி. ஊடகங்கள்..! சூடுபிடிக்கும் ஆஷஸ்!

மருந்து விலையைக் கேட்டு மயக்கமா? டிரம்ப் அலுவலகத்தில்..

வந்தே மாதரம் 150?

ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ்

SCROLL FOR NEXT