பிரிட்டனின் முடி இளவரசர் வில்லியம் 
தற்போதைய செய்திகள்

படைகளைச் சந்திக்க எஸ்தோனியா செல்கிறார் இளவரசர் வில்லியம்!

பிரிட்டனின் முடி இளவரசர் வில்லியம் எஸ்தோனியா நாட்டுக்கு பயணம் மேற்கொள்வதைப் பற்றி...

DIN

உக்ரைனுக்கு ஆதரவாக எஸ்தோனியா நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள பிரிட்டன் நாட்டு படைகளைச் சந்திக்க முதல்முறையாக அந்நாட்டுக்கு முடி இளவரசர் வில்லியம் பயணம் மேற்கொள்கிறார்.

ரஷியாவுடனான போரில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாகவும் பால்டிக் மாநிலங்களில் ரஷிய படைகளின் ஆதிக்கத்தை சமாளிக்கவும் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடான பிரிட்டனின் படைகள் ’ஆப்ரேஷன் காப்ரிட்’ எனும் ராணுவ நடவடிக்கையின் கீழ் போலந்து மற்றும் எஸ்தோனியா ஆகிய நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், எஸ்தோனியா நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள பிரிட்டன் படைகளைச் சந்திக்க பிரிட்டன் ராஜ்ஜியத்தின் முடி இளவரசர் வில்லியம் இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டின் கென்சிங்டன் மாளிகை தெரிவித்துள்ளது.

பிரிட்டன் ராணுவத்தின் மெர்சியன் பிரிவின் தலைமை தளபதியாக பதவி வகிக்கும் இளவரசர் வில்லியம் இந்த சந்திப்பில் நேட்டோவின் கிழக்கு பகுதியை வலுப்படுத்தும் பிரிட்டன் படைகளுடன் கலந்துரையாடவுள்ளார்.

இதையும் படிக்க: உலகளவில் 56 மனித சிறுநீரகங்களை விற்ற உக்ரேனிய பெண் போலந்தில் கைது!

இதனைத் தொடர்ந்து, அவர் ரஷியாவுடன் எல்லையை பகிர்ந்துக்கொள்ளும் நேட்டோ அமைப்பைச் சேர்ந்த எஸ்தோனியாவின் தலைநகர் தாலினில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வார் என்றும் ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக எஸ்தோனியா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பார்வையிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இந்த சந்திப்பானது ரஷியா - உக்ரைன் போருக்கு அமெரிக்க தலைமையிலான 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் முன்வைக்கப்படவுள்ளது.

மேலும், இம்மாத துவக்கத்தில் லண்டனில் நடைபெற்ற ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி பிரிட்டன் அரசர் சார்லஸை சந்தித்த பின்னர் இளவரசர் வில்லியமின் பயணமானது மேற்கொள்ளப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்தவாசியில் ரக்சா பந்தன் விழா

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

திருச்சி மாநகரில் பலத்த மழை

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

SCROLL FOR NEXT