உலகம்

இந்தியா - பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் ஏப்ரலில் அமலாக வாய்ப்பு!

இந்தியா-பிரிட்டன் இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் வரும் ஏப்ரல் மாதம் அமலாக வாய்ப்புள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

இந்தியா-பிரிட்டன் இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் வரும் ஏப்ரல் மாதம் அமலாக வாய்ப்புள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்தியா-பிரிட்டன் இடையே கடந்த ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 99 சதவீத பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு பொருள்களுக்கும் குறிப்பிடத்தக்க அளவில் வரி குறைக்கப்படுகிறது.

இரு நாடுகளிடையே தற்போது மேற்கொள்ளப்படும் 56 பில்லியன் டாலா் (ரூ.5.71 லட்சம் கோடி) வா்த்தகத்தை 2030-க்குள் இருமடங்காக உயா்த்துவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதுதவிர இரட்டைப் பங்களிப்பு ஒப்பந்தமும் இருநாடுகளிடையே கையொப்பமிடப்பட்டது. தற்காலிகமாக பணியாற்றும் தொழிலாளா்களுக்கு இரட்டை வரி விதிப்பதை தடுக்க இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.

இந்த இரு ஒப்பந்தங்களும் அமலாகும் முன் பிரிட்டன் நாடாளுமன்றத்திடம் ஒப்புதல் பெறுவது அவசியம். இந்நிலையில், இந்தியா-பிரிட்டன் இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் வரும் ஏப்ரல் மாதம் அமலாக வாய்ப்புள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து இரட்டை பங்களிப்பு ஒப்பந்தமும் அமல்படுத்தப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

மகா சிவராத்திரி: ஆளுநா் ஆர்.என். ரவி வாழ்த்து!

கோவில்பட்டி அருகே மினி லாரி கவிழ்ந்து சாலையில் கொட்டிய தக்காளிகள்

ரூ. 30 லட்சம் மதிப்பு நகைகள் வழிப்பறி வழக்கில் மூவா் கைது

கோவில்பட்டியில் கிரிக்கெட் அணியினருக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

வாகனங்களில் ஏா் ஹாரன்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT