அமெரிக்க நடிகை ஸேடி சின்க் ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் தொடரின் ‘மேக்ஸ்’ என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் பிரபலமானார். 
தற்போதைய செய்திகள்

'ஸ்பைடர் மேன்' புதிய பாகத்தில் இணையும் 'ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்' நட்சத்திரம்?

‘ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்’ நடிகையின் புதிய படம் குறித்து...

DIN

‘ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்’ இணையத் தொடர் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை, ஸ்பைடர் மேன் திரைப்படங்களின் புதிய பாகத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நெட்பிளிக்ஸில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்’ இணையத் தொடர் மூலம் பிரபலமான அமெரிக்க நடிகை ஸேடி சின்க், ஸ்பைடர் மேன் திரைப்படத்தின் 4வது பாகத்தில் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே ஸ்பைடர் மேனாக அறியப்படும் நடிகர் டாம் ஹோலண்டின் நடிப்பில் சோனி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த புதிய பாகத்தை டெஸ்டின் டேனியல் க்ரெட்டான் இயக்குகிறார்.

இதையும் படிக்க: விடுதலை நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு!

மேலும், ஸ்பைடர் மேன் திரைப்படங்களின் கதாநாயகியான புகழ்பெற்ற ‘எம்ஜே’ கதாப்பாத்திரத்தில் நடிகை ஸெண்டையா மீண்டும் தொடரவுள்ள நிலையில், ஸேடி சின்க் இணைவது குறித்து சோனி மற்றும் மார்வெல் நிறுவனங்களின் தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் இணையத் தொடரின் ’மேக்ஸ்’ என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் அறியப்படும் நடிகை ஸேடி சின்க்கின் திரைப்படமான ’ஓ’தெஸ்ஸா வருகின்ற மார்ச் 20 அன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

SCROLL FOR NEXT