விராலிமலை பட்டமரத்தான் கோயில் சம்பிரதாய ஜல்லிக்கட்டுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட கோயில் காளை 
தற்போதைய செய்திகள்

விராலிமலை பட்டமரத்தான் கோயில் ஜல்லிக்கட்டு: சம்பிரதாயமாக கோயில் காளை அவிழ்க்கப்பட்டது

ஆண்டுதோறும் தோறும் நடக்கும் தொடர் நிகழ்வு என்பதால் சம்பிரதாயமாக கோயில் காளை மட்டும் அவிழ்க்க கமிட்டியாளர்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு வியாழக்கிழமை அவிழ்க்கப்பட்டது.

DIN

விராலிமலை: விராலிமலை பட்டமரத்தான் கோயிலில் மாசி மாதம் நடைபெறும் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் நிலையில், நிகழாண்டு வாடிவாசல் அருகே உள்ள திடலில் அதிக அளவு நீர் தேங்கி உள்ளதால் போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதை அடுத்து தொடர் நிகழ்வை கைவிடமுடியாத சூழலால் வியாழக்கிழமை சம்பிரதாயமாக வாடிவாசலில் கோயில் காளை மட்டும் அவிழ்க்கப்பட்டது.

புதுக்கோட்டை மாாவட்டம், விராலிமலை பட்டமரத்தான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 29 ஆம் தேதி திருவிழா நடத்தப்பட்டு கோயில் திடலில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படும்.

இந்த நிலையில், நிகழாண்டு அண்மையில் பெய்த மழையால் கோயில் குளத்தில் நீர் நிரம்பி உள்ளது. இதனால் வாடிவாசலில் அவிழ்க்கப்படும் காளைகள் பாய்ந்து செல்வதற்கு வழி இல்ததாலும், காளை மற்றும் பார்வையார்களின் பாதுகாப்பை கருதில் கொண்டு நிகழாண்டு போட்டி குறிப்பிட தேதியில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இருப்பினும் ஆண்டுதோறும் தோறும் நடக்கும் தொடர் நிகழ்வு என்பதால் சம்பிரதாயமாக கோயில் காளை மட்டும் அவிழ்க்க கமிட்டியாளர்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு வியாழக்கிழமை அவிழ்க்கப்பட்டது.

முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட காளையை கொட்டடித்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. பின்னர் கோயிலில் பூஜை நடத்தப்பட்டு காளை அவிழ்க்கப்பட்டது. சம்பிரதாய ஜல்லிக்கட்டு மற்றும் கோயில் காளை என்பதால் காளைகளை தழுவ யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT