ஆரோக்யா பால்  
தற்போதைய செய்திகள்

ஆரோக்யா பால், தயிர் விலை உயர்வு

ஹட்சன் நிறுவனத்தின் ஆரோக்கியா பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியிருந்த நிலையில், ஹட்சன் நிறுவனத்தின் ஆரோக்கியா பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பால் சந்தையில் 84 சதவீதம் தனியார் நிறுவனங்களிடம் உள்ளன. அதனால் அவை கூட்டணி அமைத்துக் கொண்டு நிர்ணயிப்பது தான் பால் விலை என்றாகி விட்டது.

இந்த நிலையில், தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியிருந்த நிலையில், ஹட்சன் நிறுவனத்தின் ஆரோக்கியா பால் விலை லிட்டருக்கு ரூ.4, தயிர் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது. இதனால் நிறைகொழுப்பு பாலின் விலை லிட்டர் ரூ.82-க்கும், அரை லிட்டர் ரூ.40-க்கும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பால் சந்தையில் 84 சதவீதம் தனியார் நிறுவனங்களிடம் உள்ளன. அதனால் அவை கூட்டணி அமைத்துக் கொண்டு நிர்ணயிப்பது தான் பால் விலை என்றாகி விட்டது. தனியார் நிறுவனங்களில் கட்டணக் கொள்ளையை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என வாடிக்கையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தனியார் பால், தயிர் விலை மீண்டும் அதிகரித்திருக்கும் நிலையில், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT