ரைசினா உரையாடல் மாநாட்டில் பங்கேற்க தலைநகர் தில்லி வந்தடைந்தார் நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் அர்ஸு ரானா டியூபா 
தற்போதைய செய்திகள்

தில்லியில் நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர்!

நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா வந்திருப்பதைப் பற்றி...

DIN

நேபாள நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அர்ஸு ரானா டியூபா இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

இந்தியவில் நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான ரைசினா உரையாடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேபாளத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் அர்ஸு ரானா டியூபா இன்று (மார்ச் 14) புது தில்லி வந்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 10 அன்று தெய்வீக வழிபாட்டுக்காக அமைச்சர் டியூபா இந்தியா வந்துள்ளதாக நேபாள வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் 12 அன்று ஜார்க்கண்டிலுள்ள பாபா பைதியநாத் தாம் மற்றும் பஸுகிநாத் ஆகிய கோயில்களில் அவர் வழிபாடு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, வருகின்ற மார்ச் 17 முதல் 19 வரை இந்தியத் தலைநகர் புது தில்லியில் நடைபெறவுள்ள ‘ரைசினா உரையாடல் -2025’ மாநாட்டில் அவர் பங்கேற்கவுள்ளார். மேலும், அவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகவும் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ரயில் கடத்தல் விவகாரம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி!

இதற்கு முன்னர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அழைப்பை ஏற்று கடந்த 2024 ஆகஸ்டில் இந்தியாவிற்கு டியூபா வருகைத் தந்திருந்தார். அப்போது இருநாட்டு உறவுகள் குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்றது.

முன்னதாக, ரைசினா உரையாடல் என்பது புவிசார் அரசியல் மற்றும் புவி பொருளாதாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் முக்கிய மாநாடாகும், இதில் சர்வதேச அளவிலான பிரச்சனைகளைத் தீர்க்க தேவையான முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும்.

மேலும், இந்த மாநாட்டில் இந்தியாவின் அழைப்பை ஏற்று சர்வதேச நாடுகளின் பிரதமர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்: ஆட்சியா் வழங்கினாா்

குறைதீா் கூட்டம் நடத்தப்படுவதில்லை: தியாகிகள், வாரிசுகள் வேதனை

கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

பிடாரியம்மன் கோயில் ஆவணித் திருவிழா

SCROLL FOR NEXT