நிதிநிலை (2025-26) அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சா் தங்கம் தென்னரசு . 
தற்போதைய செய்திகள்

ரூ.3,796 கோடி நிதி நிலுவை: நிதியமைச்சா் தங்கம் தென்னரசு

2016-17 மற்றும் 2024-25 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், மாநில அரசிற்கு ரூ.45,182 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு.

DIN

மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மத்திய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய தொகைகளின் விகிதம் தொடர்ச்சியாக மிக அதிக அளவில் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், 2016-17 மற்றும் 2024-25 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், மாநில அரசிற்கு ரூ.45,182 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் 5 ஆவது மற்றும் கடைசி முழுமையான நிதிநிலை (2025-26) அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

அப்போது,

மொழிக் கொள்கையில் சமரசம் இல்லை!

எவ்வித சமரசத்திற்கு இடம்தராமல் இருமொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இதன்மூலம் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதோடு, ஆங்கிலத்தின் உதவியோடு, உலகை வெல்லும் ஆற்றல்களை தமிழர்கள் பெற்றிருக்கிறார்கள். இன்றைக்கு இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

ரூ.45,182 கோடி இழப்பு

மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மத்திய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய தொகைகளின் விகிதம் தொடர்ச்சியாக மிக அதிக அளவில் குறைந்து கொண்டே வருகிறது.இதனால், 2016-17 மற்றும் 2024-25 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், மாநில அரசிற்கு ரூ.45,182 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரூ.3,796 கோடி நிதியை நிலுவை

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது.

ஆனால், 27.11.2024 முதல் 11.03.2025 வரை வேலைசெய்த தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய ரூ.2,839 கோடி ஊதியம் மற்றும் ரூ.957 கோடி நிதி என மொத்தம் ரூ.3,796 கோடி நிதியை நிலுவை வைத்துள்ளது மத்திய பாஜக அரசு.

ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் நிதியையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதி வழங்க மறுத்துள்ள மத்திய அரசு, மிக்ஜாம் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பேரிடர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.776 கோடி மட்டுமே விடுத்தது.

இந்த வஞ்சிப்புகள், மாநில அரசின் நிதிநிலையை வெகுவாக பாதித்துள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT