ப. சிதம்பரம் (கோப்பிலிருந்து) 
தற்போதைய செய்திகள்

2-வது மொழியே கற்பிக்காத நிலையில் 3-வது மொழி வேறு: ப. சிதம்பரம் விமர்சனம்

பல மாநிலங்களில் இரண்டாவது மொழியான ஆங்கிலத்தையே கற்பிக்க முயலாத நிலையில், இதில் மூன்றாவது மொழி வேறு என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

DIN

பல மாநிலங்களில் இரண்டாவது மொழியான ஆங்கிலத்தையே கற்பிக்க முயலாத நிலையில், இதில் மூன்றாவது மொழி வேறு என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, இருமொழிக் கொள்கை வெற்றிபெறாவிட்டால், மும்மொழிக் கொள்கையைப் பற்றி விவாதிப்பது தேவையற்றது என தெரிவித்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் தலைவர் ப.சிதம்பரம், நாட்டில் எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கை செயல்படுத்தவில்லை. குறிப்பாக ஹிந்தி பேசும் மாநிலங்களில், ஒரு மொழி கொள்கைதான் பயன்பாட்டில் இருக்கிறது. மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கூட மும்மொழிக் கொள்கை கிடையாது.என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பல மாநிலங்களில் இரண்டாவது மொழியான ஆங்கிலத்தையே கற்பிக்க முயலாத நிலையில், இதில் மூன்றாவது மொழி வேறு என விமர்சித்துள்ளார்.

இது குறித்த அவர் பேசியதாவது:

முதல் மொழி தாய் மொழி. அதில் எதுவும் சர்ச்சையில்லை. அனைத்து மாநிலங்களிலும் தாய்மொழிதான் முதல் மொழியாக இருக்க வேண்டும். நம் மாநிலத்திலாவது இரண்டாவது மொழி ஆங்கிலத்தை கற்பிக்க முயற்சி செய்து வருகிறோம். ஆனால் பல மாநிலங்களில் ஆங்கிலத்தைக் கற்பிக்க முயற்சியே செய்யவில்லை. இதில் மூன்றாவது மொழி எங்கு வந்தது.

இரண்டு மொழிகளில் புலமை உடையவராக நமது குழந்தைகளை மாற்ற வேண்டும். அதன்பிறகு மூன்றாவது மொழி, ஏன் நான்காவது மொழிகள் குறித்து சிந்திக்கலாம். மூன்றாவது, நான்காவது மொழிகள் எல்லாம் நம் எதிரிகள் இல்லை. முதலில் நம்முடைய குழந்தைகளுக்கு இரண்டாவது மொழியைக் கற்றுக் கொடுங்கள் என்று சிதம்பரம் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விக்கிரவாண்டி அருகே தடுப்புக் கட்டையில் காா் மோதி தீ பிடித்து விபத்து: 3 போ் உயிரிழப்பு

யேமன்: கப்பல் தாக்குதலுக்கு ஹூதிக்கள் பொறுப்பேற்பு

பிகாா் இளைஞா் கொலை வழக்கில் மூவா் கைது

சா் கிரீக் செக்டாரை கைப்பற்ற நினைத்தால் கடும் பதிலடி: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

மூத்த குடிமக்களை பாதுகாப்பது இளையோா்களின் கடமை: க.பொன்முடி

SCROLL FOR NEXT