கோப்புப் படம் ANI
தற்போதைய செய்திகள்

பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடல்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று (மார்ச் 18) தெரிவித்துள்ளனர். அம்மாகாணத்தில் அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதல்ளைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலையினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.

இருப்பினும், பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதற்கான முழுமையான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, கடந்த மார்ச் 11 அன்று பலூசிஸ்தான் லிபரேஷன் ஆர்மியை சேர்ந்த தீவிரவாதிகள் அந்நாட்டின் குவேட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கி சென்ற ஜாஃபர் அதிவிரைவு ரயிலை சிறைப்பிடித்தனர். இதில், அந்த ரயிலில் பயணித்த 25 பேர் கொல்லப்பட்டனர்.

இதையும் படிக்க: காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல்: 413 பாலஸ்தீனர்கள் பலி!

பின்னர், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையின் மூலம் 30 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு 300க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பாகிஸ்தான் நாட்டின் வளமிக்க மாகாணமான பலூசிஸ்தானின் பூர்வக்குடிகளான பலூச் இன மக்கள் பல தசாப்தங்களாக அவர்களது சொந்த நிலப்பரப்பில் அந்நாட்டு அரசினால் ஒதுக்கப்பட்டு வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

அம்மாகாணத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள், தங்களது அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் அழிக்கும் பாகிஸ்தான் ராணுவத்தினரை ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதுவதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், பலூசிஸ்தான் தேசியவாத அமைப்புகளைச் சேர்ந்த நபர்கள், அம்மாகாணத்தைச் சேர்ந்த ஆர்வலர்கள் மற்றும் மக்கள் ஆகியோர் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக மாயமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

இந்த வராம் கலாரசிகன் - 12-10-2025

பொறியாளர்கள் பணிக்கான தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

பழந்தமிழரின் காலநிலை அறிவு!

SCROLL FOR NEXT