மீண்டும் உயர்ந்த தங்கம் 
தற்போதைய செய்திகள்

மீண்டும் உயர்ந்த தங்கம்: இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.66 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.66 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த மார்ச் 14 ஆம் தேதி ரூ.66,400-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

அதனைத் தொடர்ந்து 15 ஆம் தேதி பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.65,760-க்கும், மார்ச் 17 ஆம் தேதி பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.65,680-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ. 66,000-க்கு விற்பனையானது. ஒரு கிராமுக்கு ரூ. 40 உயர்ந்து, ரூ. 8,250-க்கு விற்பனையானது.

தங்கத்தின் விலை இரண்டாவது முறையாக ரூ. 66 கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், புதன்கிழமை மீண்டும் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது மக்களிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ. 66,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ. 40 உயர்ந்து, ரூ. 8,290-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.114-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘அமேஸான் பண்டிகை விற்பனை: தமிழ் நாட்டில் உற்சாக வரவேற்பு’

வாக்குவாதத்தில் மனைவியை சுட்டுக்கொன்ற கணவா்

வாக்கு திருட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 56 காங்கிரஸாா் கைது

கேரள இளைஞா் தற்கொலை விவகாரம்: நீதி கேட்டு இளைஞா் காங்கிரஸ் போராட்டம்

க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசையில் விஐடிக்கு 142-வது இடம்: வேந்தா் கோ. விசுவநாதன்

SCROLL FOR NEXT