தற்போதைய செய்திகள்

பாதுகாப்பு காரணங்களால் கேகேஆர் - லக்னௌ போட்டி வேறு இடத்துக்கு மாற்றம்!

பாதுகாப்பு காரணங்களால் கேகேஆர் - லக்னௌ போட்டி வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

DIN

பாதுகாப்பு காரணங்களால் கேகேஆர் - லக்னௌ போட்டி குவாஹாட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன.

இந்த நிலையில், ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் ராம நவமி கொண்டாட்டங்கள் காரணமாக, ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் போட்டிக்கான மைதானம் குவாஹாட்டிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஷாருக்கானின் அறிவுரையை நினைவுகூர்ந்த வெங்கடேஷ் ஐயர்!

முன்னதாக, மேற்குவங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி ராம நவமியன்று மேற்கு வங்கம் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட ஊர்வலங்கள் நடைபெறும் என்று அறிவித்திருந்தார். இதனால், பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சீசனிலும், ராம நவமியன்று நடைபெற்ற கொல்கத்தா - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியும் பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஐபிஎல்லில் இம்பாக்ட் பிளேயர் விதி தொடரும்! -பிசிசிஐ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT