தற்போதைய செய்திகள்

கோவையில் ரூ.71 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை ரூ.71 லட்சத்து 50 ஆயிரம் ஹவாலா பணம் சிக்கியது.

DIN

கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை ரூ.71 லட்சத்து 50 ஆயிரம் ஹவாலா பணம் சிக்கியது. இதுதொடர்பாக, ஆந்திரம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் போதை தடுப்பு பிரிவு போலீசார் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஆந்திரத்தில் இருந்து கொச்சி சென்ற சிவப்பிரகாஷ் பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது, தலா ரூ.71 லட்சத்து 50 ஆயிரம் பணம் இருந்தது தெரிய வந்தது.

அவா் வைத்திருந்த பணத்துக்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. மேலும், முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்ததால் சிவப்பிரகாஷை காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா். அங்கு நடத்திய விசாரணையில், ஆந்திரத்தில் இருந்து கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட ஹவாலா பணம் எனத் தெரிய வந்தது.

இதுகுறித்து கோவை வருமான வரித் துறை அலுவலா்களுக்கு போலீஸாா் தகவல் தெரிவித்தனா். வருமான வரித் துறை அலுவலா்களிடம் சிவப்பிரகாஷையும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.71 லட்சத்து 50 ஆயிரம் ஹவாலா பணத்தையும் போலீஸாா் ஒப்படைத்தனா்.

இதையடுத்து ஆந்திரத்தில் அவாிடம் பணத்தைக் கொடுத்தனுப்பிய நபா் யாா், கொச்சியில் பணத்தை வாங்கிச் செல்ல இருந்தவா் யாா், எங்கிருந்து ஹவாலா பணம் அனுப்பப்பட்டது போன்றவை குறித்து வருமான வரித் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒசாகா வரலாற்றுச் சாதனை..! இறுதிப் போட்டியில் இளம் வீராங்கனையுடன் மோதல்!

டிரெண்டிங் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

அறிவியல்,பொறியியல் பட்டதாரிகளுக்கு சயின்டிஸ்ட் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

தலைவா முகத்தைப் பார்க்கணும்... ரஜினியால் ரசிகர்கள் உற்சாகம்!

நட்பு ரீதியான போட்டியில் சரமாரியாகத் தாக்கிக்கொண்ட கால்பந்து வீரர்கள்!

SCROLL FOR NEXT