நியாயமான மறுசீரமைப்பு கூட்டம் தொடங்கியது!
சென்னையில் நியாயமான மறுசீரமைப்பு கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஏழு மாநிலங்களின் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளுடனான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கியது.
சென்னை: சென்னையில் நியாயமான மறுசீரமைப்பு கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஏழு மாநிலங்களின் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளுடனான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கியது.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தும் பரிசு அளித்தும் வரவேற்றார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர ஹோட்டலில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில முதல்வா்கள், ஏழு மாநிலங்களின் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளுடனான தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஏழு மலைகளும் வெங்கடேஸ்வரருக்குச் சொந்தமானது: முதல்வர் சந்திரபாபு நாயுடு
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தும் பரிசு அளித்தும் வரவேற்றார்.
இந்தக் கூட்டத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி , கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்பட பிற மாநிலங்களைச் சோ்ந்த தலைவா்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்துள்ளவர்களின் பெயர்பலகைகள் ஆங்கிலம் மற்றும் அவரவர் தாய்மொழியில் வைக்கப்பட்டுள்ளது.
கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாப்போம்
முன்னதாக, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும் மாநிலங்கள், கூட்டாட்சியைப் பாதுகாக்க ஒன்றிணைந்த வரலாற்று சிறப்புமிக்க நாள் இன்று.
நம் மாநிலங்களின் உரிமையை நிலைநாட்ட ஒன்றிணைந்துள்ள முதல்வர்களையும், அரசியல் தலைவர்களையும் வரவேற்கிறேன். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாப்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.