மீண்டும் அமெரிக்கா செல்லும் பாகிஸ்தான் பிரதமர்! காரணம் இதுதான்!!
காஸா அமைதி வாரிய முதல் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா செல்லும் பாகிஸ்தான் பிரதமர்!
காஸாவில் மறுசீரமைப்புக்காகவும் அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்தின் முதல் கூட்டம் பிப். 19-இல் வாஷிங்டனில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அமைதி வாரிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அல்லது அவர்களது சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில், காஸா அமைதி வாரியத்தில் சேர டிரம்ப்பின் அழைப்பை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தானும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கிறது. இதற்காக அந்நாட்டின் பிரதமர் ஷேபாஸ் ஷரீஃப் பிப். 18-இல் அமெரிக்கா செல்வார் என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானுடன், எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, கத்தார், சவூதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் ‘அமெரிக்க அமைதி மையத்தில்’ நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அப்போது, ‘காஸா மறுசீரமைப்பு’ பற்றியே முக்கியமாக விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
Pakistan Prime Minister Shehbaz Sharif is expected to attend the inaugural session of the Board of Peace on Gaza to be held next week in Washington.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.