தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் 1500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  
தற்போதைய செய்திகள்

தென் கொரியா காட்டுத் தீ: 4 பேர் பலி...1500 பேர் வெளியேற்றம்!

தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் 4 பேர் பலியானதைப் பற்றி...

DIN

தென் கொரியாவின் தென்கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீயினால் 4 பேர் பலியாகியுள்ளனர்.

சான்சியோங் மாகாணத்தின் வனப்பகுதியில் கடந்த மார்ச் 21 அன்று ஏற்பட்ட காட்டுத் தீயானது அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பல்வேறு பகுதிக்குகளுக்கு பரவியுள்ளது. இதனால், தற்போது 5 பேர் பலியானதாகக் கூறப்பட்டுள்ள நிலையில் 6க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து அந்நாட்டு தீயணைப்புத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், அப்பகுதியில் நிலவும் வறண்ட வானிலையினால் காட்டுத் தீயானது தொடர்ந்து பரவி மக்களின் உயிரை பாதிப்புக்குள்ளாக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: பலூசிஸ்தான்: மர்ம கும்பலின் தாக்குதல்களில் 4 காவலர்கள் உள்பட 8 பேர் பலி!

இந்நிலையில், தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க அந்நாட்டு மீட்புப் படையினர் 30க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களின் உதவியுடன் அந்த தீயை அணைக்க போராடி வருகின்றனர். இன்று (மார்ச் 23) அதிகாலை நிலவரப்படி 30 சதவிகித காட்டுத் தீயானது அணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும், அப்பகுதியைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, இந்த காட்டுத் தீயினால் 3,286.11 ஹெக்டேர் அளவிலான நிலம் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வடக்கு கியோங்சாங் மற்றும் சான்சியோங் மாகாணத்தில் 1,000 ஹெக்டேர் அளவிலான நிலம் தீயினால் முற்றிலும் அழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

SCROLL FOR NEXT