ராணுவத்தினர்.. (கோப்புப் படம்)
தற்போதைய செய்திகள்

பலூசிஸ்தான் ரயில் கடத்தல்: தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 4 பேர் கைது!

பலூசிஸ்தான் ரயில் கடத்தல் தீவிரவாதிகளின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ரயில் கடத்தலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மார்ச் 11 அன்று தடைசெய்யப்பட்ட பலூச் விடுதலைப் படை எனும் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 440 பயணிகளுடன் சென்ற ஜாஃபர் விரைவு ரயிலை கடத்தி சிறைப்பிடித்தனர்.

இந்தக் கடத்தலில் 18 பாதுகாப்புப் படையினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பின்னர், பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 33 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு 300-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பலூசிஸ்தான் மாகாணத்தில் ஏராளமான தாக்குதல்கள் நடைபெற்று வந்த நிலையில், அம்மாகாண காவல் துறையினரின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ரயில் கடத்தலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு உதவியதாக அவர்களது கூட்டாளிகள் எனச் சந்தேகிக்கப்படும் 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ரயில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு தடயவியல் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அவர்களது கைரேகைகள் சேகரிக்கப்பட்டு அந்நாட்டு அதிகாரிகள் தீவிரவாதிகளை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள பாகிஸ்தானின் வளமிக்க மாகாணமான பலூசிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சூடான் ராணுவத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் பலி?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

தடக் 2: அமோக வரவேற்பில் ஹிந்தி பரியேறும் பெருமாள்!

“முதல்வர் மீது Thiruma-வுக்கு நம்பிக்கை இல்லை!”: Nainar Nagendran | DMK | VCK

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் MK Stalin! | DMK

SCROLL FOR NEXT