சின்ன பர்கூர் அருகே விபத்துக்குள்ளான கார் 
தற்போதைய செய்திகள்

பர்கூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலி

பர்கூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலியாகினர்.

DIN

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலியாகினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த லோகேஷ் (22), திவாகரன் (24),குமரேசன் (36), கன்னியப்பன் (70),பாலகிருஷ்ணன் (52), சேகர் (44),ஜனா (22) ஆகிய ஏழு பேரும் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு ஒரு காரில் , புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை நான்கு மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம், சின்ன பர்கூர் அருகே சென்று கொண்டிருந்தபோது,ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தேசிய நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் உள்ள தடுப்பு சுவர், மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சேகர், ஜனா ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயமடைந்த ஐந்து பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காளமாடனும் சாதிக் கலவரங்களும்... பைசன் - திரை விமர்சனம்

உ.பி.யில் கொல்லப்பட்ட தலித் இளைஞரின் குடும்பத்தினரை சந்தித்த ராகுல்!

வடசென்னையின் உலகம்... அரசன் புரோமோ!

தே.ஜ. கூட்டணி வென்றால் பிகாருக்கு புதிய முதல்வர்? அமித் ஷா சூசகம்!

அதிமுக தொடக்க நாள்: எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை!

SCROLL FOR NEXT