பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: கடந்த 4 ஆண்டுகளின் தேர்ச்சி விகிதம் என்ன?
பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை வெளியிட்டார்.
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை வெளியிட்டார். இந்தாண்டும் மாணவிகள் முதலிடம் பிடித்தனர். மாணவிகள் 96.70 சதவிகிதமும், மாணவர்கள் 93.16 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினா்.
தேர்வு எழுதியவர்களில் 95.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.56 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கடந்த 4 ஆண்டுகளின் தேர்ச்சி விகிதம்
2021:
தேர்வெழுதிய மாணவர்கள்: 8,16,473
தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 8,16,473
தேர்ச்சி விகிதம்: 100%
2022
தேர்வெழுதிய மாணவர்கள்: 8,06,277
தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 7,55,988
தேர்ச்சி விகிதம்: 93.76%
2023
தேர்வெழுதிய மாணவர்கள்: 8,03,385
தேர்ச்சிபெற்ற மாணவர்கள்: 7,55,451
தேர்ச்சி விகிதம் : 94.03%
2024
தேர்வெழுதிய மாணவர்கள்: 7,60,606
தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 7,19,196
தேர்ச்சி விகிதம்: 94.56%
2025
தேர்வெழுதிய மாணவர்கள்: 7,92,494
தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 7,53,142
தேர்ச்சி விகிதம்: 95.03%
100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் எண்ணிக்கை
கடந்த ஆண்டு - 2,478
இந்த ஆண்டு - 2,638
100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகள் எண்ணிக்கை
கடந்த ஆண்டு - 397
இந்த ஆண்டு - 436
தனித்தேர்வர்கள் தேர்ச்சி விவரம்
பிளஸ் 2 தேர்வு எழுதிய 8,019 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 7,466 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோன்று தேர்வு எழுதிய 140 சிறைவாசி மாணவர்களில் 130 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தம் தேர்வு எழுதிய 16,904 தனித்தேர்வகளில் 5,500 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.