பிரதமர் நரேந்திர மோடி 
தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் தாக்கினால் வலுவான பதிலடி கொடுக்கப்படும்: பிரதமர் மோடி

பாகிஸ்தான் சுட்டால் நாங்களும் சுடுவோம், தாக்கினால் நாங்களும் தாக்குவோம் - பிரதமர் மோடி

DIN

புதுதில்லி: பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டால், வலுவான பதிலடி கொடுக்கப்படும் என போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் தொலைபேசியில் பேசியபோது பிரதமர் மோடி தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

"ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கை மூலம் ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ஆயுதப் படைகள் புதன்கிழமை (மே 7) அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. இதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கோட்டையான பஹவல்பூர் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் தளமான முரிட்கே ஆகியவை அழிக்கப்பட்டன.

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், பதற்றத்தைத் தணிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்க அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தொலைபேசியில் பேசினார்.

அப்போது, பாகிஸ்தான் தாக்கினால் இந்தியா கடுமையான பதிலடி கொடுக்கும். சிந்து நதி நீர் ஒப்பந்தம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துடன் தொடர்புடையது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கும் வரை, சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. இயல்பு நிலையில்தான் இருக்கிறது. பாகிஸ்தான் சுட்டால் நாங்களும் சுடுவோம், தாக்கினால் நாங்களும் தாக்குவோம். பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் வலுவான பதிலடி கொடுக்கப்படும். இந்த விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா ஏற்காது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு இந்தியா பதிலடி கொடுப்பதில் புதிய வழக்கம் ஏற்பட்டுள்ளது. இனி எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அதிக விலை கொடுக்க நேரிடும்.

மேலும், பயங்கரவாதிகளை ஒப்படைப்பது குறித்து பேசினால் பேசுவதற்கு தயார் என மோடி தெரிவித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல கூட்டுறவு சங்க அலுவலகத்தில் சுதந்திர தினம்

இந்தியாவில் முதல்முறையாக பிவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க அனுமதி

ஏறுமுகத்தில் இந்திய ஏற்றுமதி

வோடஃபோன் ஐடியா இழப்பு அதிகரிப்பு

டிரம்ப்பின் அவசரநிலையை எதிா்த்து வாஷிங்டன் மாநகராட்சி வழக்கு

SCROLL FOR NEXT