மேட்டூா் அனல் மின் நிலையம் Center-Center-Coimbatore
தற்போதைய செய்திகள்

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாயில் உடைந்ததால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

DIN

மேட்டூா்: மேட்டூா் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாயில் உடைந்ததால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன்கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரமும், 2-ஆவது பிரிவில் 600 மெகாவாட் திறன்கொண்ட ஓா் அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், முதல் பிரிவின் முதல் அலகில் டீசல் செல்லும் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு கால்வாய் வழியாக வெளியேறியது.

இதனால் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஏராளமான டீசல் கழிவுநீா் கால்வாய் வழியாக வெளியேறியது. தகவலறிந்த அனல் மின் நிலைய அதிகாரிகள், தீயணைப்புத் துறையினா், அனல் மின் நிலைய அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் உலா் சாம்பலை கால்வாயில் நிரப்பி டீசல் வெளியேறாமல் தடுத்தனா்.

பின்னா், தீயணைப்புத் துறையினா் டீசல் குழாய் பகுதியில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனா். மேலும், டீசல் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சரிசெய்யும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT