ஏர்டெல் கோப்புப் படம்
தற்போதைய செய்திகள்

ஏர்டெல் சேவையில் பாதிப்பு! பயனர்கள் அவதி!

சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் அவதி அடைந்துள்ளனர்.

DIN

சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் அவதி அடைந்துள்ளனர்.

ஏர்டெல் சேவை முடக்கப்பட்டதா? அதில் என்ன பிரச்னை? என சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இரவு 8 மணிமுதலே ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தைக் குறிப்பிட்டு (டேக் செய்து) இணையத்தில் பயனர்கள் பலர், புகார்களைப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை, மதுரை, தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் புகார்கள் அதிகம் எழுந்துள்ளன.

ஏர்டெல் சேவை பாதிப்பு குறித்து சமூக வலைதளங்களில் பதிவு

ஏர்டெல் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 3% சரிந்து, ரூ. 11,022 கோடியாக உள்ளதாக அந்நிறுவனம் இன்று (மே 13) அறிவித்திருந்தது.

இதனிடையே அந்நிறுவனத்தின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பயனர்கள் பலர் புகார் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ஏர்டெல் நிறுவனம் சார்பில் எந்தவித கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

ஏர்டெல் சேவை பாதிப்பு குறித்து சமூகவலைதளங்களில் பதிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அரசு அனுப்பிய மெட்ரோ திட்ட அறிக்கையில் குறைகள்!

செமெரு எரிமலை வெடிப்பு! 54,000 அடி உயரம் வரை எழுந்த புகை! Indonesia

ஜி20 மாநாடு! பிரதமர் மோடி நவ.21-ல் தென்னாப்பிரிக்கா பயணம்!

“PM மோடி ஜீயை ரொம்ப பிடிக்கும்!” பிரதமர் மோடி வாழ்த்திய சிறுமிகள்!

நிவின் பாலியின் சர்வம் மாயா படத்தின் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT