திடீரென முடங்கிய யுபிஐ சேவை: பயனர்கள் அவதி!
யுபிஐ மின்னணு பரிவர்த்தனை சேவையில் திடீர் முடக்கம்! பயனர்கள் அவதி...
UPI-APP072439.JPG
- Center-Center-Delhiயுபிஐ மின்னணு பரிவர்த்தனை சேவை இன்று(பிப். 10) மாலை திடீரென முடங்கியதால் இன்னொருவருக்கு பணம் அனுப்புதல், ஃக்யூர்.ஆர். கோடு ஸ்கேன் செய்தல் உள்பட பல யுபிஐ சேவைகள் மேற்கொள்ள இயலவில்லை. கூகுள்பே, போன்பே, பேடிஎம் உள்பட பல தளங்களிலும் இந்தப் பிரச்னை இன்று மாலை 7 மணியளவில் எதிரொலித்தது.
இதைத்தொடர்ந்து பெரும்பாலான சமூக ஊடக தளங்களிலும் இது குறித்து பயனர்கள் புகார் தெரிவித்து பதிவுகள் பல வெளியிட்டதைப் பார்க்க முடிந்தது.
தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய பெருநகரங்களில் யுபிஐ சேவை கடுமையாகவே பாதிக்கப்பட்டதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நேரடியாக பணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டதாக பயனர்கள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
UPI down - transaction failures on payment apps
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.