குழந்தைகள் மற்றும் பதின் பருவ வயதினர்களின் ஆன்மீக மற்றும் நல்லொழுக்க வளர்ச்சிக்காக, தனித்துவமான வாராந்திர நற்பண்பு கல்வித் திட்டத்தை சென்னை இஸ்கான் நடத்துகிறது.
இந்த வகுப்புகள் ஜூன் 2025 மத்தியில் தொடங்கி மார்ச் 2026 வரை, வாரம் ஒருமுறை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வகுப்பும் ஒன்றரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
'' நற்பண்புக் கல்வி வகுப்புகள் ஆன்லைனிலும், மற்றும் சென்னையின் பல்வேறு இடங்களில் நேரடியாகவும் நடத்தப்படுகிறது. பயிற்சி மொழி ஆங்கிலம் அல்லது தமிழ் ஆகும். வெவ்வேறு நாள்களில், வெவ்வேறு நேரங்களில் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
'நவவித பக்தி' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, கடவுள் மீதான பக்தி, நல்லொழுக்கம் மற்றும் பாரம்பரியத்தை மாணவர்களிடம் வளர்க்கும் நோக்குடன் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதன் மூலம் குழந்தைகளின் கவனம் மற்றும் நினைவாற்றல் மேம்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
''வயதினருக்கு ஏற்ப பயிற்றுவிக்கும் முறையானது வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் (6 முதல் 12 வயது வரை) கதைகள், வினாடி வினா, ஸ்லோகங்கள், பஜனை, நெருப்பில்லா சமையல், கலை மற்றும் கைவினைகள் மூலம் கற்பிக்கப்படுகிறது.
பதின்ம வயதினர்களுக்கு (13 முதல் 17 வயது வரை) கதைகள், விவாதங்கள், கலந்துரையாடல்கள், மன வரைபடம், மற்றும் ஒரு நிமிட உரை போன்ற பயிற்சிகளின் மூலம் கற்பிக்கப்படுகிறது.
பங்கேற்பாளர்களுக்கு பாடம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், காணொளிகள் ஆகியவை கூகுள் வகுப்பறை மூலம் வழங்கப்படும். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். பதிவு செய்ய குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. www.iskconchennai.org/bpss என்ற இணையதளப் பக்கத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு, 8072599295 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.