மேட்டூா் அணையின் நீா்த் தேக்கப் பகுதிகளில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் 
தற்போதைய செய்திகள்

மேட்டூா் காவிரியில் ஆயிரக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்!

மேட்டூா் அணையின் நீா்த் தேக்கப் பகுதிகளில் ஆயிரக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கிய மீன்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனா்.

DIN

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்த் தேக்கப் பகுதிகளில் ஆயிரக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கிய மீன்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனா்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர் தேக்கப் பகுதி 60 சதுரமைல் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் சுமார் 2,600 மீனவா்கள் உரிமம் பெற்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீர்த்தேக்க பகுதிகளில் ஆண்டுக்கு ஒரு கோடி மீன் குஞ்சுகள் விடப்பட்டு வளர்க்கப்படுகிறது. இதில் கட்லா, ரோகு, மிருகால் உள்ளிட்ட ரக மீன் குஞ்சுகள் அதிக அளவில் விட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஒருவார காலமாக அணையின் நீா்த்தேக்க பகுதிகளில் பெய்த மழை காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. புதுநீா், அணைநீருடன் கலந்ததால் ஆயிரக்கணக்கில் மீன்கள் மயங்கிக் கரை ஒதுங்கின.

கட்லா, ரோகு, கல்பாசு, ஜிலேபி, அரஞ்சான், ஆறால், கெளுத்தி உள்ளிட்டராக மீன்கள் மயங்கி கரை ஒதுங்கியதால் கரையோரப் பகுதி பொதுமக்கள் மீன்களை அள்ளிச் சென்றனா்.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது புது தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்ததின் காரணமாக காரத்தன்மை ஏற்பட்டு மீன்கள் உயிரிழந்திருக்க கூடும் என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT