கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், சனிக்கிழமை (நவ.8) முதல் நவ.13 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சனிக்கிழமை (நவ.8) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 இரண்டு மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் சனிக்கிழமை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

Heavy rain likely in seven districts in the next 2 hours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலை திட்டத்தின் காந்தியடிகள் பெயர் நீக்கம்: மாதனூரில் திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்!

பிராஸ்டேட் வீக்கம்: ஏன், எப்படி? ஆண்கள் செய்ய வேண்டியது என்ன?

ராகுலை பிரதமராக்குவதே பிரியங்காவின் குறிக்கோள்! டி.கே. சிவக்குமார்

ஸ்ரீநகரில் 1.25 லட்சம் குடும்பங்களுக்குத் தடையற்ற மின்சாரம்: உமர் அப்துல்லா

100 நாள் வேலை திட்டத்தின் காந்தியடிகள் பெயரை நீக்கியதை கண்டித்து திமுக கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம்!

SCROLL FOR NEXT