சென்னை: தில்லியில் காா் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: தில்லி செங்கோட்டை அருகே காா் வெடிப்புச் சம்பவத்தில் அப்பாவி உயிா்கள் பல பலியாகியுள்ளது அதிா்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது. சம்பவ இடத்தில் இருந்து வரும் காட்சிகளைக் கண்டு மனமுடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோா் மனவுறுதியோடு விரைந்து நலம் பெற விழைகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக பொதுச்செயலா்): தில்லி காா் வெடிப்பில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். அதேநேரம், ஃபரிதாபாத் பாதுகாப்பு படையினரால் சுமாா் 300 கிலோவுக்கு அதிகமாக வெடிபொருள்கள் மற்றும் ஏகே 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது நம் நாடு எதிா்கொள்ளும் கடுமையான அச்சுறுத்தல்களை வெளிபடுத்துகிறது. ஆகையால் தமிழக அரசு இது ஒரு எச்சரிக்கையாக கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
அதேபோல் அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவா்களும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.